உயிர்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்டும் உடலுறுப்புக் கொடையாளர்கள்- முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி பதிவு

உடலுறுப்பு தானம் என்பது, ஒருவர் மறைந்த பின்னரும் அவரது உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்கும் மகத்தான மனிதநேயச் செயலாகும்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on
Summary

செப்டம்பர் 23 தமிழ்நாடு உடலுறுப்பு தான நாளாகக் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, முதலமைச்சர் விஜய் வெளியிட்ட பதிவில், சிறுவன் ஹிதேந்திரனின் உடலுறுப்பு தானம் மாநிலத்தில் மனிதநேயச் சிந்தனையைத் தூண்டியதாகக் கூறியுள்ளார். ஒருவர் மறைந்த பின்னரும் அவரது உறுப்புகள் பலருக்கு புதிய நம்பிக்கையும் வாழ்வும் அளிப்பதை விளக்கி, உடலுறுப்புக் கொடையாளர்களை பெருமையுடன் நினைவுகூர வேண்டும் என அவர் அழைத்துள்ளார்.

உலக உறுப்பு தான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உலக உறுப்பு தான தினம் அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் தேசிய உறுப்பு தான தினம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 2008-ம் ஆண்டில் 15 வயதான ஹிதேந்திரனின் மரணத்திற்கு பிறகு தமிழகத்தில் செப்டம்பர் 23-ந்தேதியை உடல் உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று உடல் உறுப்பு தான தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மனிதநேய செயல்

உடலுறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சிறுவன் ஹிதேந்திரனின் உடலுறுப்புகளை தானமாக வழங்கியதை நினைவுகூரும் வகையிலும் ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ஆம் நாள் தமிழ்நாடு உடலுறுப்பு தான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

உடலுறுப்பு தானம் என்பது, ஒருவர் மறைந்த பின்னரும் அவரது உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்கும் மகத்தான மனிதநேயச் செயலாகும். உறுப்பு மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பலருக்குத் தானமாக வழங்கப்படும் ஒவ்வொரு உறுப்பும் புதிய நம்பிக்கையையும், புதிய வாழ்வையும் அளிக்கிறது.

மனிதநேயச் சுடரை ஏந்தி, உயிர்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்டும் உடலுறுப்புக் கொடையாளர்கள் அனைவரையும் இந்நாளில் பெருமையுடன் நினைவுகூர்வோம்! என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com