

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், விக்னேஷ் வரவேற்பு அளித்தனர். சாலையில் திரண்டு இருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் விஜய் மாவட்ட தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
அதன்படி இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு 9 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.1,110 கோடி மதிப்பில் வங்கி கடன் உதவி வழங்கும் விழாவை தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், விக்னேஷ் வரவேற்பு அளித்தனர். சாலையில் திரண்டு இருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக பெருந்துறைக்கு புறப்பட்டு சென்றார். மொத்தம் 7 இடங்களில் மக்களை சந்திக்கும் வகையில் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதன்படி முதலமைச்சர் விஜய் ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் சாலையில் ரோடு ஷோ சென்றார். வாகனத்தில் நின்றவாறு அவர் பொதுமக்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தார்.
சாலையின் இரு புறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதலமைச்சரை பார்த்ததும் பொதுமக்கள் உற்சாக மிகுதியில் தளபதி தளபதி என்று கோஷம் எழுப்பினர். பதிலுக்கு முதலமைச்சர் விஜய் பொதுமக்களை பார்த்து சிரித்தவாறு கையை அசைத்தார்.