ராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா நன்னாளில் புகழ் வணக்கங்கள்!- முதலமைச்சர் விஜய்

தமிழர் பெருமையைப் போற்றுவோம்! தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்! என்று கூறியுள்ளார்.
ராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா நன்னாளில் புகழ் வணக்கங்கள்!- முதலமைச்சர் விஜய்
Published on: 
Summary

1041-ஆவது சதய விழாவில், மாமன்னர் இராஜராஜ சோழனின் புகழ் வணக்கங்களை முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். தஞ்சைப் பெரிய கோவில் மூலம் தமிழர் கலை, பண்பாட்டின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த மாமன்னரின் வரலாறு என்றும் நிலைத்து நிற்கும் என அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

புகழ் வணக்கங்கள்

தமிழர்களின் பெருமையையும், தமிழர் கட்டடக்கலை மற்றும் நிர்வாகத் திறனின் மகத்துவத்தையும் உலகரங்கில் நிலைநாட்டிய மாமன்னர் இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா நன்னாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்!

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோவில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டடக்கலைச் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிய அவரது வரலாற்றுப் பெருமை என்றும் நிலைத்து நிற்கும்!

தமிழர் பெருமையைப் போற்றுவோம்! தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்! என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com