மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்- முதலமைச்சர் விஜய் உத்தரவு

கல்வி, வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்தினரின் சமூக பொருளாதார நிலையை ஆய்வு செய்ய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
அமைச்சரவை கூட்டம்
Published on: 
Summary

மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார். வடகிழக்குப் பருவமழை, சமூக நீதி கணக்கெடுப்பு, மாநில வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. வெற்றி பெற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அமைச்சரவை கூட்டம்

த.வெ.க. அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம், கடந்த ஜூன் 5-ந்தேதியும், அதைத்தொடர்ந்து நிதி நிலை அறிக்கைக்கு முன்னதாக ஜூலை 16-ந் தேதியும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சரவை கூடியது

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

பருவமழை

இந்தக் கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசித்தார்.

அதனை தொடர்ந்து சமூக நீதி கணக்கெடுப்பு தொடர்பாக ஆணையம் எடுக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்தினரின் சமூக பொருளாதார நிலையை ஆய்வு செய்ய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

மேலும், மக்களுக்கு என்ன தேவையோ அதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com