மதுரை சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக, தமிழகம் முழுவதும் 107 ஆஸ்பத்திரிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அங்கு தங்க மோதிரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
CM Vijay - Public
Published on: 
Summary

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில், முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.

த.வெ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற அறிவிப்புகளை, ஒவ்வொன்றாக முதலமைச்சர் விஜய் நிறைவேற்றி வருகிறார்.

தாய்மாமன் தங்க மோதிரம்

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில், 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக த.வெ.க. அறிவித்தது.

முதலமைச்சர் விஜய்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்தார்.

அதன்படி, 22.6.2026 அன்று முதல் தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட இருக்கிறது.

1.28 லட்சம் குழந்தைகள்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக, தமிழகம் முழுவதும் 107 ஆஸ்பத்திரிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அங்கு தங்க மோதிரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் தினமும் 100 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.

மதுரை மாவட்டம்

முதல் தவணையாக இதற்காக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளன.

மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி

இந்தநிலையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில், முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க இருக்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு அவர், முதன்முறையாக மதுரைக்கு வர இருப்பதால் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'ரோடு ஷோ'

முன்னதாக இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய் தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். மதுரை விமான நிலையம் வந்த முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள், தவெக நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் வழிநெடுகிலும் முதலமைச்சர் விஜய்க்கு தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை பார்த்து முதலமைச்சர் விஜயும் கையசைத்ததால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.

4 ஆயிரம் போலீசார்

முதலமைச்சரின் வருகையையொட்டி, மதுரை விமான நிலையம், அரசு ஆஸ்பத்திரி, காந்தி அருங்காட்சியகம், மீனாட்சி அம்மன் கோவில் பகுதி உள்ளிட்ட இடங்களில் 4 ஆtயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக, விருதுநகர், தேனி, திண்டுக்கல், குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் மதுரையில் குவிக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com