பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் பலி- நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் விஜய்

மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சங்கீதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on: 
Summary

வேலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உயிரிழந்தார். முதலமைச்சர் விஜய், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவியும், காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும் அறிவித்தார்.

முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேதனை

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் நேற்று தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியிலிருந்த கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் படுகாயமடைந்து அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சங்கீதா என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இரங்கல்- நிதியுதவி

இவ்விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com