புதிய தலைமை செயலகம் உள்ளிட்ட 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்

தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள், பசுமைக் கட்டட தர நிலைகளுக்கு உட்பட்டு வளாகம் உருவாக்கப்படும்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on
Summary

தமிழ்நாடு சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

* தமிழக விளையட்டு வீரர்கள் சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்லும் வகையில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்.

* தேசிய, உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் வகையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்.

* சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த, திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க திட்டம்.

* தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும்.

* இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை அறிந்து பயிற்சி அளிக்கப்படும்.

* மோட்டார் பந்தய தடம் மற்றும் அதற்கான நவீன கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

* கார் பந்தய அரங்குகளை அமைப்பதால் சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தி ஆலை, வேலைவாய்ப்பு மேம்படும்.

* தற்போதைய தலைமைச் செயலக கட்டிடம் 400 ஆண்டுகள் பழமையானது. ஜார்ஜ் கோட்டை பகுதியில் 4 ஏக்கர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் உள்ளது. ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலக கட்டிடம் அவசியம்.

* ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடியில் புதிய சட்டமன்றம் அமைக்கப்படும். நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம், தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் அமைக்கப்படும்.

* அனைத்து அரசு துறைகளும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கப்படும்.

* தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள், பசுமைக் கட்டட தர நிலைகளுக்கு உட்பட்டு வளாகம் உருவாக்கப்படும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com