

நீலாங்கரையில் முதலமைச்சர் விஜயை சந்தித்து பேசினார். சுமார் 1 மணி நேரம் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்திய கல்வி முறையில் நடைபெறும் முறைகேடுகள், நீட் உள்ளிட்ட தேர்வுத்தாள் கசிவுகள், கல்விக் கட்டண உயர்வு மற்றும் வேலை வாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை திரட்டி பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ‘மாணவர்களின் குரல்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக அவர்களிடம் பேசி வருகிறார்.
அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தொடங்கி, மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் நாசிக் நகரங்கள், மத்தியபிரதேசம் மாநிலம், இந்தூர் போன்ற இடங்களில் ‘மாணவர்கள் குரல்’ நிகழ்ச்சி நடத்திய ராகுல்காந்தி, இன்று சென்னையில் உள்ள தீவுத் திடலில் மாணவர்கள் முன்னிலையில் பேச இருக்கிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 1.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் அவரை உற்சாகமாக வரவேற்றார்கள். விமான நிலையம் வரவேற்பு முடிந்ததும் அங்கிருந்து காரில் நீலாங்கரை சென்றார்.
நீலாங்கரையில் முதலமைச்சர் விஜயை இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் 1 மணி நேரம் இருவரும் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து ராகுல் காந்திக்கு முதலமைச்சர் விஜய் மதிய விருந்து அளித்தார்.
பின்னர் முதலமைச்சர் விஜய், ராகுல் காந்தி ஒரே காரில் புறப்பட்டனர். சென்னை பாலவாக்கம் தேவாலயம் மற்றும் அதன் அருகில் உள்ள முதியோர் இல்லத்தை பார்வையிட்டனர்.
இதைத்தொடர்ந்து பாலவாக்கத்தில் உள்ள காபி ஷாப்பில் முதலமைச்சர் விஜயும் ராகுல் காந்தியும் ஒன்றாக அமர்ந்து காபி அருந்தினர்.