

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக நியமிக்கபட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு கேரள ஆளுநரான அர்லேகர் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்து அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அதில், தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக அர்லேகரை நியமித்து உத்தரவிட்டார்.
அதே சமயம், சிக்கிம் மாநில ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராக மாற்றப்பட்டார்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக பொறுப்பேற்ற அர்லேகரை சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.