

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார். இதனால் கேரளம் மாநில ஆளுநராக இருந்த ராஜேந்திர அர்லேகர் தமிழ்நாடு ஆளுநர் பதவியை கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரளம் மாநில ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசா, கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆர்.என். ரவி 2021 செப்டம்பர் 18-ந்தேதி முதல் 2026 மார்ச் 11-ந்தேதி வரை தமிழக ஆளுநராக பணியாற்றினார். அதன்பின் அர்லேகர் கூடுதலாக கவனித்து வந்தார்.