டீ குடித்து முருங்கைப் பறித்த முதல்வர் - சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற ஆய்வுக்கூட்டத்தை நடத்துவாரா?: உதயநிதி

Dummy முதலமைச்சரின் ஆசியோடு தான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா?
Udhayanidhi stalin
Published on: 

நாளிதழ்களில் இன்றைய கொலைப்பட்டியல் என்று தனி Column போடும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன.dummy முதலமைச்சரின் ஆசியோடு தான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? என்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப்பிறகு சட்டம் ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக்கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை.

நாளிதழ்களில் இன்றைய கொலைப்பட்டியல் என்று தனி Column போடும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன.

சமீபத்தில் மதுரை மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன், உடலில் காயங்களோடு சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறான்.

சேலத்தில் ரவுடி டேவிட் என்பவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டிக்கொலைச் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கல்லூரி மாணவனை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

த.வெ.க.வினரும் தங்களது Crime Quota-வை விட்டுக்கொடுப்பதில்லை என்பதற்கு சாட்சியாக,கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க பெண் நிர்வாகி ஒருவர், கணவனையே கொலைச் செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குப் போய் Tractor ஓட்டி, Tea குடித்து, முருங்கைப் பறித்த முதலமைச்சர், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக்கூட்டத்தையாவது நடத்துவாரா?

ஒருவேளை அத்தகைய கூட்டங்களை நடத்தி இருந்தால் இன்னும் கொலைகள் தொடர்வது ஏன்? Dummy முதலமைச்சரின் ஆசியோடு தான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா?

என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com