வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு 150 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ள முரசு புயலிம் வேகம் மணிக்கு 13 கி.மீலிருந்து 10 கி.மீ.ஆக குறைந்துள்ளது.தமிழக வடகடலோர பகுதிகளில் இருந்து விலகிச் செல்லும் புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்கும் முரசு புயல் தமிழக வடகடலோர பகுதிகளில் இருந்து விலகிச் செல்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஓரிரு மாவட்டங்களில் இரவு 7 மணி வரைக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.கடலூர், கிருஷ்ணகிரி ம் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயலின் நகர்வால் உள்வரும் மேகமூட்டம் மற்றும் காற்று வீசுதல் காரணமாக இன்று இரவு மற்றும் நாளை காலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் மழையானது பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர.