தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை பாரிமுனையில் 15 செ.மீ. மழை: 33 இடங்களில் கனமழை பதிவு

அண்ணா பல்கலைக் கழகம், நந்தனம், ஒய்.எம்.சி. ஏ, கொரட்டூர், நெற்குன்றம், வளசரவாக்கம், சைதாப்பேட்டை தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
மழை
Published on: 
Summary

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பாரிமுனையில் அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை முழுவதும் 33 இடங்களில் கனமழை பதிவாகி, பல பகுதிகளில் 6 முதல் 14 செ.மீ. வரை மழை அளவுகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் கடப்பாக்கம், பாரிமுனையில் அதிகபட்சமாக தலா 15 செ.மீ. மழை பெய்துள்ளது. மணலி புதுநகர், மணலி தலா 14 செ.மீ., சாத்தாங்காடு 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

சென்னையில் 33 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. கத்திவாக்கம், பேசின்பாலம், எண்ணூர், புழல், விம்கோ நகர், தண்டையார்பேட்டை தலா 11 செ.மீ. மாதவரம், ஐஸ் ஹவுஸ், திருவொற்றியூர் புளியந்தோப்பு தலா 10 பெரம்பூர், அயனாவரம், அண்ணா நகர் மேற்கு, காசிமேடு, அமைந்தகரை, தலா 9 செ.மீ., மதுரவாயல் 11 செ.மீ., எம்.ஜி.ஆர். நகர் வட பழனி, டி.ஜி.பி. ஆபிஸ், சென்னை கலெக்டர் அலுவலகம், அடையார், கொளத்தூர், செங்குன்றம், சாலிகிராமம் தலா 7 செ.மீ. அண்ணா பல்கலைக் கழகம், நந்தனம், ஒய்.எம்.சி. ஏ, கொரட்டூர், நெற்குன்றம், வளசரவாக்கம், சைதாப்பேட்டை தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

X