

சென்னை மாநகரத்தில் நேற்றிலிருந்தே பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கிவிட்டனர். மேலும் இன்று அதிகாலை முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
அதேபோல, இரவிலும் 7- 8 மணி வரை பட்டாசுகளை வெடித்து தள்ளினர். மழை பெயத போதிலும் மழை விட்ட நேரத்தில் மொத்தமாக மக்கள் பட்டாசுளை வெடித்து தள்ளினர். தீபாவளி பட்டாசுகளால் சென்னையில் காற்று மாசுவும் கடுமையாக அதிகரித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்து மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குடும்பம் குடும்பமாக தீபாவளியை மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதற்கிடையே, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பொது மக்கள் பட்டாசுகளை வெடித்ததால், காற்றின் தரம் பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் காற்று மாசுவின் அளவு 780-ஆக அதிகரித்துள்ளது.தற்போதைய சூழலில் உலகளவில் அதிக மாசடைந்த நகரங்களில் 5ஆவது இடத்தில் சென்னை உள்ளது.
தீபாவளி தினமான இன்று சென்னையின் 9 இடங்களில் காற்று மாசுபாட்டின் அளவு. தமிழ்நாடு மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நேரடியாக அளவீடு செய்து நிகழ் நேரத்தில் வெளியிட்டுள்ளது.
இதன்படி. அரும்பாக்கத்தில் 142, கொடுங்கையூரில் 144, மணலி கிராமப் பகுதியில் 109. மணலியில் 158. பெருங்குடியில் 154 என காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.
ராயபுரத்தில் அதிகபட்சமாக 228 ஆகப் பதிவாகியுள்ளது. இது மோசமான காற்றுத் தரப் பிரிவில் இடம்பெறுகிறது. அதேநேரத்தில். வேளச்சேரி குடியிருப்புப் பகுதியில் குறைந்தபட்சமாக 71 ஆகப் பதிவாகியுள்ளது
காற்றின் தரக் குறியீடு 101 முதல் 200 வரை மிதமான பாதிப்பைக் குறிக்கும் நிலையில், 201 முதல் 300 வரை மோசமான காற்றுத் தரத்தைக் குறிக்கிறது