

சென்னை ஐகோர்ட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வேட்புமனுவில், திமுக அறக்கட்டளை தலைவராக உள்ள விவரம், சொத்து விவரங்களை மறைத்தது குறித்து தேர்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி திருஞானசம்பந்தன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது, வேட்புமனுவில் அறக்கட்டளை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை என மு.க.ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதியளித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.