பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார்

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தவர் மைத்ரேயன். மைத்ரேயன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் இணைந்தார்.
மைத்ரேயன் EDAPPADI PALANISWAMI
Published on

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த மைத்ரேயன், மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

இது தொடர்பாக அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், 'புரட்சித் தமிழர்' எடப்பாடி பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (12.9.2024 வியாழக் கிழமை), நேரில் சந்தித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார்.

அதனை, கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' எடப்பாடி பழனிசாமி அவர்கள் பரிசீலனை செய்து, டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com