வீராங்கனை நித்ய ஶ்ரீ மேலும் பல புதிய உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன் - முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்ய ஶ்ரீ அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
நித்ய ஶ்ரீ - முதலமைச்சர் விஜய்
Published on: 
Summary

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் SH6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்ய ஶ்ரீக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் SH6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்ய ஶ்ரீ அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

வீராங்கனை நித்ய ஶ்ரீ அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் சாதனை படைத்துள்ள அவரது வெற்றி, தடைகளைத் தகர்த்து சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்குப் புதிய ஊக்கத்தை அளிக்கிறது.

வீராங்கனை நித்ய ஶ்ரீ அவர்கள், வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று, மேலும் பல புதிய உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com