ஆசிய பாராலிம்பிக் போட்டி: டேபிள் டென்னிசில் மேலும் ஒரு வெண்கலம் வென்ற இந்தியா

ஆசிய பாராலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிசில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
jehan dorab madan
Published on: 
Summary

ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் ஜெஹான் டோரப் மதன் மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் நடந்து வருகிறது. வரும் 24-ம் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

வெண்கல பதக்கம்

இந்நிலையில் இன்று பாரா போட்டிகளில் ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவு அரையிறுதி போட்டி நடைபெற்றது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஜெஹான் டோரப் மதன் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் டேபிள் டென்னிசில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com