அன்பில் மகேஷ் கைது- மு.க ஸ்டாலின் கண்டனம்

அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
mk stalin
Published on: 

திமுகவின் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரூ.100 கோடி தனியார் பள்ளி அனுமதி மோசடி வழக்கில் இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2021 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி மற்றும் நிரந்தர அங்கீகாரம் வழங்குவதாகக் கூறி, கட்சி நிதி என்ற பெயரில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் தள்ளுபடி செய்தார்.

உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறை அவரை கைது செய்தது.

இந்த நிலையில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

மக்களின் கவனத்தை திசைதிருப்ப அரசு நினைக்கிறது

அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.

அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது

என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com