தந்தையை சந்தித்து ஆசி பெற்றார் அன்புமணி

தைலாபுரம் தோட்டத்திற்கு மனைவி சவுமியா, மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் அன்புமணி வருகை தந்தார்.
அன்புமணி-ராமதாஸ்
Published on

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று தனது 61-வது திருமண நாளை கொண்டாடுகிறார். இதனால் அவரை சந்தித்து ஆசி பெற பா.ம.க. தலைவர் அன்புமணி சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்கு மனைவி சவுமியா, மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் அன்புமணி வருகை தந்தார்.

உறவினர்களுடன் வருகை தந்த அன்புமணியை வீட்டு பணியாளர்கள் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தனர். இதன்பின்னர் வீட்டிற்குள் சென்ற அன்புமணி தந்தை ராமதாசை சந்தித்து ஆசி பெற்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com