அன்பில் மகேஷின் ஜாமின் மனு வரும் 17-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

ஜாமின் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு இன்று வந்தது.
அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்
Published on: 
Summary

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமின் கோரிய மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி, தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய் மேல் வசூலித்து மேசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கடந்த அக்டோபர் 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை, வருகிற 18-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த 10-ந்தேதி தள்ளுபடி செய்தது.

பதிலளிக்க அவகாசம்

இதையடுத்து, ஜாமின் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு இன்று வந்தது.

அப்போது, சென்னை மத்திய குற்றப்பிரிவு தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஜான் சத்யன் ஆஜராகி, இந்த வழக்கில் சரணடைந்த முன்னாள் எம்.எல்.ஏ.முத்துகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க இருக்கிறோம். மற்றொரு குற்றம்சாட்டப்பட்ட நபரான சரவணன் நேற்று சரணடைந்துள்ளார். எனவே மகேஷ் ஜாமின் மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்ற நீதிபதி, போலீஸ் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வருகிற 17-ந்தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

X