அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் 18-ந்தேதி வரை நீட்டிப்பு - சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புழல் சிறையில் இருந்து காணொலி மூலமாக சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.
Anbil Mahesh
Published on: 
Summary

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் நீதிமன்ற காவலை 18-ந்தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாதம் 26-ந் தேதி தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமின் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. பரபரப்பாக வாதம் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் 10-ந்தேதி தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார்.

இந்நிலையில், அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் புழல் சிறையில் இருந்து காணொலி மூலமாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, அன்பில் மகேஷின் நீதிமன்ற காவலை 18-ந்தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

X