அமைச்சர் வன்னியரசு நேரில் சென்று உறுதியளித்தை அடுத்து, கவின் பெற்றோர்களின் காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

ஆதரவு அளித்த அனைத்து இயக்கங்களுக்கும் தாய்மையுடன் நன்றியை கூறி கொள்வதாக தெரிவித்தார்.
minister vanniarasu
Published on: 

கவின் கொலை வழக்கில் குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிகையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்த்து. குற்றாவளிகள் மீதான ரத்தை எதிர்த்து கவினின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் தமிழ்ச்செல்வி தொடர் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் சமூகநீதித் துறை அமைச்சருமான வன்னி அரசு நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குற்றப்பத்திரிகை ரத்து

மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோரான காவல் சார்பு ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரிமீதான சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சமீபத்தில் ரத்து செய்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவைக் கண்டித்தும், அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் கவினின் பெற்றோர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் உள்ள தங்கள் இல்லத்தின் முன் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேல்முறையீடு செய்யப்படும், அமைச்சர் உறுதியளிப்பு

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த கவினின் பெற்றோர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் சமூகநீதித் துறை அமைச்சருமான வன்னி அரசு நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வன்னி அரசு உறுதியளித்தார்.

காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

அமைச்சரின் இந்த நேரடி உறுதிமொழியைத் தொடர்ந்து, நியாயமான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கவினின் பெற்றோர் தங்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

இந்த போராட்ட முடிவு குறித்து கவினின் தாய் கூறியதாவது

இந்த காத்திருப்பு போராட்டத்திற்காக எங்களுக்கு நிறைய பேர் ஆதரவு தந்தார்கள்.மேலும் ஆதரவு அளித்த அனைத்து இயக்கங்களுக்கும் தாய்மையுடன் நன்றியை கூறி கொள்வதாக தெரிவித்தார்.என் பிள்ளைக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் இந்த போராட்டத்தை தொடங்கினேன்,நான் எதுவும் சொல்லாமலேயே எனக்கு நிறையே பேர் ஆதரவு அளித்தார்கள்.அவர்கள் அனைவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.மேலும் அமைச்சரின் இந்த கோரிக்கையை ஏற்று இந்த காத்திருப்பு போராட்டத்தை நிறைவுசெய்வதாக தெரிவித்தார்.

அமைச்சர் வன்னியரசு கூறும்போது

கடந்த ஆண்டு நடைப்பெற்ற கவின் படுகொலை போராட்டத்தில் பங்கெடுத்தவன் நான்.இப்படுகொலையில் சம்மந்தப்பட்ட இருவரும் கைது செய்ய பட வேண்டும் என்று உறுதியாக இருந்தது விடுதை சிறுத்தைகள் கட்சி.கடந்த அட்சியில் தொடங்கப்ப்ட போராட்டத்தில் நின்றவர்கள் நாங்கள், ஆனால் தவெக அரசு வந்த பிறகுதான தாய் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது தற்போதைய அரசு.

குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது .ஆகவே இந்த ரத்தை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வரும் கவினின் பெற்றோர் தங்களின் காத்திருப்பு போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com