

அ.தி.மு.க சார்பில் சிறுமியை கண்டுபிடிக்க கோரியும், தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை முதலே அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி பவானி. இந்த தம்பதியரின் 2-வது மகள் (வயது7).
கடந்த 11-ந் தேதி இரவு பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிறுமி, பின்னர் பெற்றோருடன் தூங்க சென்றார்.
மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது சிறுமி மாயமானாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். 10-க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமான சிறுமியை கண்டுபிடிக்க கோரி தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று அ.தி.மு.க சார்பில் சிறுமியை கண்டுபிடிக்க கோரியும், தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை முதலே அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர்.
அதனை தொடர்ந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மாயமான சிறுமியை விரைந்து கண்டுபிடித்து தரவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.