

பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் நயினார் நாகேந்திரன் அவர்களின் திருநெல்வேலி இல்லம் முன்பு காவல்துறையைக் குவித்து, அவரையும் பாஜக நிர்வாகிகளையும் சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் முடக்கும் தவெக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரையே சட்டவிரோதமாக முடக்குவது பாசிசத்தின் உச்சம்! காவல்துறையை ஏவி அரசே அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் உருவாக்குவது ஜனநாயகத்திற்கும் சட்டம் ஒழுங்கிற்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.
உடனடியாக இத்தகைய அடக்குமுறைகளைக் கைவிட்டு, சகோதரர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகளைச் சட்டவிரோதமாக முடக்கும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வன்மையாகக் கண்டித்து வலியுறுத்துகிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.