தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் - அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அ.தி.மு.க அறிவித்துள்ளது.
ADMK bye election candidate
Published on
Summary

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தமிழக வெற்றி கழகம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பரந்தாமன் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சுகன்யா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தமிழக வெற்றி கழகம் சார்பில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மரகதம் குமரவேல், மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சத்யாபாமா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்

இந்த நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் கணிதா சம்பத் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பானுமதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com