அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக தலைமை நிலைய செயலாளராக முன்னாள் அமைச்சர் வேலுமணி நியமனம்.அதிமுக அமைப்பு செயலாளர்களாக 11 பேர் நியமனம்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

அ.தி.மு.க.இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் பொன்னையன் மற்றும் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப் படுகிறார்கள்.

அதற்கு பதிலாக அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக பொன்னையன் நியமிக்கப்பட்டு உள்ளார். கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் துணை பொது செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதிமுக தலைமை நிலைய செயலாளராக முன்னாள் அமைச்சர் வேலுமணி நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதிமுக அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், ராஜன் செல்லப்பா, பாலகங்கா, கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, ஓ.எஸ்.மணியன் ,காமராஜ், ப.தனபால், பெஞ்சமின் உள்ளிட்ட 11 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com