ஜேசன் ராய், வில்லியம்சன் அரை சதம் - ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்

ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான போட்டியில் ஜேசன் ராய், வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
60 ரன்கள் அடித்த ஜேசன் ராய்
60 ரன்கள் அடித்த ஜேசன் ராய்
Published on

துபாய்:

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 57 பந்தில் 82 குவித்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 23 பந்தில் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். லோம்ரோர் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் சிறப்பாக ஆடி 60 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடினார். இதனால் அணியின் ரன் வேகம் உயர்ந்தது.

இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வில்லியம்சன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இது ஐதராபாத் அணி பெற்ற 2வது வெற்றி ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com