பாஸ்போர்ட் திருப்பி கொடுக்கப்பட்டதால் பிரேமலதா துபாய் பயணம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த திங்கட்கிழமை சென்னையில் இருந்து மகன் சண்முக பாண்டியனுடன் துபாய் சென்றார்.
பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்
Published on

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த திங்கட்கிழமை காலை சென்னையில் இருந்து அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் துபாய் சென்றார்.

விஜயகாந்துடன் அவருடைய மனைவி பிரேமலதாவும் துபாய் செல்வதாக இருந்தது. ஆனால் பாஸ்போர்ட் பிரச்சனை காரணமாக பிரேமலதா உடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பிரேமலதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் கணவர் விஜயகாந்த் துபாயில் சிகிச்சை பெற்று வருவதால் அவரது உதவிக்காக துபாய் செல்ல வேண்டும். அதனால் பாஸ்போர்ட்டை திருப்பித்தர வேண்டும் என்று மனுதாக்கல் செய்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து நீதிமன்றம் பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது.

இதையடுத்து பிரேமலதா இன்று காலை 4 மணி அளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் துபாய் புறப்பட்டு சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com