மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா- ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெறுகிறது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார்.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை:

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெறுகிறது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார்.

இவ்விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கவர்னர் மாளிகைக்கு வருகை புரிந்தார். அவருடன் முன்னாள் சபாநாயகர் தனபாலும் வந்தார். 

மேலும் காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டு ராவ், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com