சங்கரன்கோவிலில் அமைச்சர் ராஜலட்சுமி வீதி, வீதியாக நடந்து சென்று ஓட்டு வேட்டை

சங்கரன்கோவில் நகரில் புதிதாக செயல்படுத்தப்பட இருக்கும் ரூ.543 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்தின் மூலம் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.
சங்கரன்கோவில் மார்க்கெட் பகுதியில் அமைச்சர் ராஜலட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காட்சி.
சங்கரன்கோவில் மார்க்கெட் பகுதியில் அமைச்சர் ராஜலட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காட்சி.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் வீதி, வீதியாக சென்று அமைச்சர் ராஜலட்சுமி ஓட்டு வேட்டை நடத்தினார்.

சங்கரன்கோவில் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ராஜலட்சுமி சங்கரன்கோவில் ஓடை தெரு, திரு.வி.க. தெரு, பால்பண்ணை தெரு, கிளாவடி விநாயகர் கோவில் தெரு, முத்துராமலிங்கம் தெரு, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, சுவாமி சன்னதி, வடக்கு ரதவீதி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்காண்டார். மாலையில் சங்கர்நகர் தெரு பகுதிகள், சங்குபுரம் தெரு பகுதிகள் ராமசாமிபுரம் தெரு பகுதிகள், ரெயில்வே பீடர் ரோடு, தினசரி மார்க்கெட், 8, 9, 10, 14-வது வார்டுகளில் வீதி வீதியாக சென்று அமைச்சர் ராஜலட்சுமி ஓட்டு வேட்டை நடத்தினார்

அப்போது அவர் பேசுகையில், சங்கரன்கோவில் நகரில் புதிதாக செயல்படுத்தப்பட இருக்கும் ரூ.543 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்தின் மூலம் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும். இந்த திட்டத்தின் மூலம் நகரில் புதிதாக நான்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளது என்றார்.

இதில் நகர செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் வேல்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன், மகளிர் அணி துணை செயலாளர் முத்துசெல்வி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் முத்து மணி, நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பேச்சியப்பன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் அனந்தராமகிருஷ்ணன், ராமதுரை, முத்துக்குட்டி, ஜெயலட்சுமி, சரவணன், உமாமகேஸ்வரன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ராமநாதன், தலைமை கழக பேச்சாளர்கள் கணபதி, ராமசுப்பிரமணியன், கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் லட்சுமணன், இளைஞர் பாசறை நிர்வாகிகள் நிவாஸ், தங்கம், சங்கர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் திரவியம், மகளிர் அணி செயலாளர் ஸ்வர்ணா, நாகராணி, அமுதா, மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பேரவை செயலாளர் செந்தில்குமார், மேலநீலிதநல்லூர் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவசங்கரபாண்டியன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் ஜோதிராஜ், மாணவரணி துணை செயலாளர் மாரியப்பன், ஆதிதிராவிடர் நலகுழு உறுப்பினர் மாரியப்பன், பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், பா.ம.க. மாவட்ட தலைவர் சுரேஷ், நகர தலைவர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com