

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, நகர செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலையில் நகரப் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த 200 பேர் தொழிலதிபர் பிரகாஷ் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன், நகர துணை செயலாளர் புண்ணியமூர்த்தி, பொருளாளர் சுரேஷ்குமார், நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் முருகன், குட்டி, வார்டு செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.