சிறந்த கல்வி நிறுவன பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடம்

சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் சென்னை லயோலா கல்லூரி 3-வது இடத்தில் உள்ளது.
சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி
Published on

தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார்.

நாட்டில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்துள்ளது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி. 2-வது இடத்திலும், மும்பை ஐ.ஐ.டி. 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. 2-வது இடத்தை பிடித்துள்ளது. நாட்டில் சிறந்த பல்கலைக்கழக தர வரிசையில் கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் சென்னை லயோலா கல்லூரி 3-வது இடத்திலும் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்...தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல்

X

Maalai Malar
www.maalaimalar.com