

சென்னை:
தங்கம் விலையில் ஏற்ற- தாழ்வு காணப்பட்டு வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.35 ஆயிரத்து 600-க்கு விற்றது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்தது.
சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் ரூ.120 குறைந்து ரூ.35 ஆயிரத்து 480-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 435 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.73 ஆயிரத்து 400 ஆகவும் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40 ஆகவும் விற்பனையாகிறது.