

சென்னை:
தங்கம் விலையில் இன்று குறைவு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.35 ஆயிரத்து 560-க்கு விற்றது.
ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 445 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.73 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்கிறது.