

சென்னை:
தங்கம் விலை இந்த வார தொடக்கத்தில் இருந்து குறைந்தபடி இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.35 ஆயிரத்து 440-க்கு விற்றது. இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்தது.
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35 ஆயிரத்து 280-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 410 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.72 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.90-க்கு விற்கிறது.