திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆ.ராசா
ஆ.ராசா
Published on

சென்னை:

நீலகிரி எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் பழனிசாமி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில்  பேசியதாக புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தப் புகாா்கள் தொடா்பாக அறிக்கை தர தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

அதன்படி, மாவட்டத் தோதல் அதிகாரி, காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டன. இதையடுத்து அந்த அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 31-ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com