தமிழக ஆளுநர் - திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 முதல் 5 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.

முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக இடையே கடுமையான வார்த்தைமோதல்
ஏற்பட்டுள்ளது. திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது ஒருவர் முன்வைத்து வருகின்றன.

திமுக மீது 2ஜி வழக்கை சுட்டிக்காட்டி அதிமுக ஊழல்குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அதேபோல் அதிமுக மீது துறை ரீதியாக டெண்டர் முறைகளில் ஊழல் நடைபெறுவதாக திமுக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு மீது வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் தற்போது சந்தித்துள்ளார்.

ஆளுநர் உடனடான சந்திப்பின் போது திமுக தலைவர் முக ஸ்டாலினுடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு உள்பட முக்கிய தலைவர்கள் உடன் சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com