‘டெல்டா பிளஸ்’ வைரசை கண்டறிய தமிழகத்தில் இருந்து 286 பேரின் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைப்பு

குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 21 பேரின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து 20 பேரின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
டெல்டா பிளஸ் வைரஸ்
டெல்டா பிளஸ் வைரஸ்
Published on

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா முதல் அலை உருவானபோது ஆல்பா வகை வைரஸ் தொற்று காணப்பட்டது.

அதன்பிறகு அந்த ‘ஆல்பா’ வகை வைரஸ் தன்னை காத்துக்கொள்ள உருமாற்றம் அடைந்தது. உருமாற்றம் அடைந்த அந்த வைரஸ் ‘டெல்டா’ வகை வைரஸ் என அழைக்கப்பட்டது. கொரோனா தொற்றின் 2-வது அலையில் டெல்டா வகை வைரஸ்களே அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டெல்டா வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரஸ் உருவாகி உள்ளது. அதனை ‘டெல்டா பிளஸ்’ வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியது.

இதற்கிடையே டெல்டா பிளஸ் வைரசால் வேறு யாரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக தமிழகத்தின் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 50 கொரோனா நோயாளிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருந்து 30 பேரின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 21 பேரின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து 20 பேரின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com