முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

சென்னை:

சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

கருத்துருவுக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் சாதகமான பதில் வரும். சாதகமான பதில் வந்ததும் வரும் வாரத்தில் 50 வயதான பத்திரிகையாளர் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்.

தமிழகத்தில் இதுவரை 1,33,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

X

Maalai Malar
www.maalaimalar.com