கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டவுடன் மயங்கிய நர்சின் உடல்நிலை சீராக உள்ளது- டாக்டர்கள் தகவல்

கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டவுடன் மயங்கிய நர்சின் உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் 2 நாட்களில் 98 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 98 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
அவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான் ஒப்புதல்

பாகிஸ்தான் நாட்டின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் கொரோனாவை கட்டுப்படுத்தும் அவசர கால பயன்பாட்டிற்கு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை: மந்திரி சுதாகர்

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்று மந்திரி சுதாகர் கூறினார்.
கொரோனா தடுப்பூசியில் அரசியல் செய்ய வேண்டாம்- தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த மோடி கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் - உ.பி. காங்கிரஸ் பிரமுகர் சொல்கிறார்

மக்களுக்கு நம்பிக்கை உருவாக்கும் வகையில், முதல் நாளிலேயே பிரதமர் மோடி தனக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என உ.பி. காங். முன்னாள் எம்.எல்.ஏ. பிரதீப் மாத்தூர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 2.24 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டது- மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் இதுவரை 2.24 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும், இதில் 447 பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் 2-வது நாளில் 3 ஆயிரத்து 30 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய 2-வது நாளில் 3 ஆயிரத்து 30 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
பிரேசிலில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி

பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா மற்றும் சினோவாக் ஆகிய 2 தடுப்பூசிகள் அவசரகால மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொண்டதில் 447 பேருக்கு பக்கவிளைவு: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

நேற்றும் இன்றும் 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 447 பேருக்கு லேசாக பக்கவிளைவு ஏற்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் தடுப்பூசி போட்டவர்களில் 51 பேருக்கு லேசான பாதிப்பு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி மாநிலத்தில் 4,319 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதில் 51 பேர் பாதிக்கப்பட்டதாகவும், ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகம் முழுவதும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது மிக முக்கியமான படி... இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்த ராஜபக்சே

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி திட்டம் தொடங்கியதற்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் அழைப்பு- கவர்னர் தகவல்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் அழைப்பு விடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவு ஏற்பட்டால் இழப்பீடு - பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

கோவேக்சின் தடுப்பூசியால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என சுகாதார உழியர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்ப்பது நல்லது அல்ல- அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்ப்பது நல்லது அல்ல என்றும், தடுப்பூசி போடுவதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் இருக்காது என்றும் அப்பல்லோ டாக்டர் கே.ஆர்.பழனிசாமி தெரிவித்தார்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 2 தடுப்பூசிகளும் ‘சஞ்சீவனி'யாக கிடைத்துள்ளன - ஹர்சவர்தன் பெருமிதம்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 2 தடுப்பூசிகளும் ‘சஞ்சீவனி'யாக கிடைத்திருப்பதாக சுகாதார மந்திரி ஹர்சவர்தன் பெருமிதத்துடன் கூறினார்.
ராணுவத்தில் உள்ள மருத்துவ பணியாளர்களில் 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

ராணுவத்தில் பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களில் முதல்கட்டமாக 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போடும்பணி திடீர் நிறுத்தம்

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போடும்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.