நடிகர் பவன் கல்யாணுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு

நடிகர் மற்றும் ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாணுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நடிகர் பவன் கல்யாண்
நடிகர் பவன் கல்யாண்
Published on

ஐதராபாத்:

ஆந்திர பிரதேசத்தில் திருப்பதியில் கடந்த 3ந்தேதி நடந்த பொதுகூட்டம் மற்றும் சமீபத்தில் நடந்த பாதயாத்திரையில் நடிகர் பவன் கல்யாண் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. ஜனசேனா கட்சியின் தலைவராகவும் இருந்து வரும் பவன் கல்யாணுக்கு நடந்த முதல் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்தது.

எனினும், கடந்த 2 நாட்களுக்கு முன் மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில், பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தி கொண்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com