விவசாய கடன் தள்ளுபடி: அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சட்டசபையில் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அவினாசியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடியபோது எடுத்தபடம்.
அவினாசியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடியபோது எடுத்தபடம்.
Published on

அவினாசி:

தமிழ்நாட்டில் விவசாயிகள் பெற்ற கடன்தொகை ரூ12,110 கோடி தள்ளுபடி செய்து சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதையடுத்து அவினாசி,பொங்கலூர் மற்றும் சேவூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அவினாசி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மங்கலம் ரோட்டில்பட்டாசு வெடித்து பொதுமக்களுககு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் தம்பி ராஜேந்திரன், பாசறை செயலாளர் கேசவமூர்த்தி, ஜெயலலிதாபேரவை தலைவர் வேல்முருகன், அவைத்தலைவர் சுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் மணி உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர். இதேபோல் துலுக்கமுத்தூர், வேலாயுதம்பாளையம், சூளை, உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பொங்கலூரில் பொங்கலூர் ஒன்றிய செயலாளர்கள் யு.எஸ். பழனிசாமி (மேற்கு), காட்டூர் சிவபிரகாஷ் (கிழக்கு) ஆகியோர் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் நாகராஜ், மில்ஆறுமுகம், சிதம்பரம், மகாலிங்கம், மோகனசுந்தரம், பரமசிவம், சுப்பிரமணி, கிட்டுசாமி, நடராஜ், வேலன் தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில், அவினாசி வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி தலைமையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் என்.சின்னக்கண்ணு, அவினாசி வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சரவணக்குமார், ஒன்றிய விவசாய அணி செயலாளர் சுந்தரராஜன், விவசாய சங்க பொறுப்பாளர்கள் மேற்கு தோட்டம் பழனிச்சாமி, பந்தம்பாளையம் வேலுசாமி, அதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவு பொறுப்பாளர்கள் கார்த்தி, துரைப்பாண்டி ஹரிஹரன், அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் ஆர்.சங்கரமூர்த்தி, கிருஷ்ணசாமி, கே.எம்.சுப்பிரமணியம், முருகசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com