பொதுமக்களுக்கு 24 ஆயிரம் முகக்கவசங்கள்- சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

ராஜபாளையம் யூனியன் சார்பில் பொதுமக்களுக்கு 24 ஆயிரம் முகக்கவசங்களை சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வழங்கினார்.
சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ
சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் அதன் தலைவர் சிங்கராஜ் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள் மூலம் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 24 ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் தலா 1000 வீதம் 24 ஆயிரம் முகக்கவசங்களை  வழங்கினார். மேலும் அனைத்து கவுன்சிலர்களிடமும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி  அறிவுறித்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய குழு தலைவர் மல்லி ஆறுமுகம், மாவட்ட துணைசெயலாளர் ராசா அருண்மொழி, நகர செயலாளர் ராமமூர்த்தி ஒன்றிய குழு துணைதலைவர் துரை கற்பகராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டார் வேல்முருகன், ஷியாம்ராஜா, மணிகண்டராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com