இந்தியர்களின் திறமைக்கு கணிதமேதை ராமானுஜம் ஓர் எடுத்துக்காட்டு: இஸ்ரேல் பிரதமர் புகழாரம்

இந்தியர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்பதற்கு கணிதமேதை ராமானுஜம் ஓர் எடுத்துக்காட்டு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியர்களின் திறமைக்கு கணிதமேதை ராமானுஜம் ஓர் எடுத்துக்காட்டு: இஸ்ரேல் பிரதமர் புகழாரம்
Published on

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் இஸ்ரேல் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார். அவருடன் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் சென்று சிறப்பித்துள்ளார்.

இரு தலைவர்களும் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மறைந்த கணிதமேதை ராமானுஜத்தை வெகுவாக புகழ்ந்து பேசினார். ”இந்திய மக்களுக்காக நாங்கள் சிறப்பான நிர்வாகத்தை கொண்டுள்ளோம். மறைந்த எனது மாமா கல்லூரியில் கணித ஆசிரியராக பணியாற்றினார். அவர் என்னிடம் கணிதமேதை ராமானுஜத்தின் அறிவு குறித்து பெருமையாக பேசுவார்.” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com