குஜராத்: சோமநாதர் ஆலயத்தில் ராகுல் காந்தி வழிபாடு

குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வழிபாடு செய்தார்.
குஜராத்: சோமநாதர் ஆலயத்தில் ராகுல் காந்தி வழிபாடு
Published on

அகமதாபாத்:

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற ராகுல் காந்தி கட்சி அமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக சவுராஷ்டிரா இன மக்கள் அதிகமாக வாழும் மத்திய குஜராத், தெற்கு மற்றும் வடக்கு குஜராத் பகுதியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டார்.

இதன் ஒரு பகுதியாக டெல்லியில் இருந்து வந்த ராகுல் காந்திக்கு சவுராஷ்டிரா பகுதியில் உள்ள கேஷோட் விமான நிலையத்தில் இன்று காலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து பிரசித்தி பெற்ற சோமநாதர் ஆலயத்துக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு சோமநாதராக வீற்றிருக்கும் சிவ பெருமானை வழிபாடு செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com