மோடியை எதிர்க்கும் தைரியம் விஜய்க்கு உண்டு- காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத்

2014-ம் ஆண்டு காங்கிரசை குறை சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார்.
COngress MP Vishnuprasadh
Published on: 

புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பார்வையாளரும், கடலூர் காங்கிரஸ் எம்.பி.யுமான விஷ்ணு பிரசாத் புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

1000 பேர் பங்கேற்பு

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலககோரி டெல்லியில் 1ம் தேதி நடைபெறும் ஊர்வலத்தில் புதுச்சேரியில் இருந்து குறைந்தது 1,000 காங்கிரசார் பங்கேற்பது என்று முடிவு செய்துள்ளோம்.

2014-ம் ஆண்டு காங்கிரசை குறை சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், அவர் சொன்ன ஊழல் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

13½ கோடி வாக்காளர்கள் நீக்கம்

2023-ல் சட்டத்திருத்தம் கொண்டு வந்த மூலம் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சேர்ந்து ஞானேஷ் குமாரை தேர்தல் ஆணையராக நியமித்தனர்.

இதுவரை 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13½ கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளனர். ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயலை செய்த ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு எந்திரமுறையை மாற்றி பழைய வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

மோடியை எதிர்க்க தைரியம்

பிரதமர் மோடி அரசிடம் நியாயத்துக்கு இடமில்லை. நாட்டில் போராட்டத்தின் மூலம் மக்களை திரட்டி புரட்சி வெடித்தால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று ராகுல்காந்தி அறைகூவல் விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கொள்கையில் உறுதியாக இருப்பவர். பாஜக மற்றும் பிரதமர் மோடியை எதிர்க்கும் தைரியம் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு இருப்பதால்தான் த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்து கூட்டணி ஆட்சி யில் காங்கிரஸ் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com