மத்திய மந்திரிக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கைது

காங்கிரஸ் துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் 10 பேர் கருப்பு கொடி காட்ட முயற்சித்தனர்.போலீசார் அங்கிருந்த நிர்வாகிகள் 9 பேரை கைது செய்தனர்.
மத்திய மந்திரிக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கைது
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் நடந்த இலக்கிய விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றுவிட்டு கடற்கரை சாலை வழியாக சென்னை சென்றார்.

அப்போது ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மத்திய மந்திரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தலைமை செயலகம் அருகே இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் 10 பேர் கருப்பு கொடி காட்ட முயற்சித்தனர்.

தகவலறிந்த பெரியகடை இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கிருந்த நிர்வாகிகள் 9 பேரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com