ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு - வீடு வீடாக சென்று உணவு வழங்கிய ஹாரி-மேகன் தம்பதி

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹாரி-மேகன் தம்பதி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு - வீடு வீடாக சென்று உணவு வழங்கினர்.
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹாரி-மேகன் தம்பதி
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹாரி-மேகன் தம்பதி
Published on

வாஷிங்டன்:

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹாரி-மேகன் தம்பதி, தங்களது மகன் ஆர்ச்சியுடன் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குடியேறினர்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கியதால், இந்த தம்பதி கடந்த மாத இறுதியில் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு மாறினர். அங்கு மேகனின் சொந்த ஊரான கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவர்கள் குடியேறினர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளிலிருந்து வெளியே வர இயலாத முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் ஹாரி-மேகன் தம்பதி வீடுதேடி சென்று உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்பட்டுவரும் ‘பிராஜெக்ட் ஏஞ்சல் புட்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அவர்கள் இந்த சேவையை செய்து வருகின்றனர்.

மிகவும் சாதாரணமாக ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் மற்றும் தொப்பி அணிந்திருக்கும் இருவரும் வீடு வீடாக சென்று, உணவு பொட்டலங்களை வழங்குகின்றனர்.

உணவை பெறும் நபர்களிடம் அவர்களுக்கு உணவு வழங்க வரப்போவது யார் என்று முன்னதாக தெரிவிக்கப்படவில்லை.

மேலும் ஹாரியும், மேகனும் முக கவசம் அணிந்து உணவு பொட்டலங்களை வினியோகித்ததால் பெரும்பாலான நபர்கள் அவர்களை அடையாளம் காணவில்லை.

எனினும் உணவு வழங்கும் போது, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான ஹாரி-மேகனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com