திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி தினகரன் வெற்றி பெற்றுள்ளார்: பிரேமலதா விஜயகாந்த்

திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி ஆர்.கே.நகரில் தினகரன் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்று உள்ளார் என்று மதுரை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி தினகரன் வெற்றி பெற்றுள்ளார்: பிரேமலதா விஜயகாந்த்
Published on

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்களுக்கு தே.மு.தி.க. சார்பில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் தே.மு.தி.க. மகளிர் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒக்கி புயலால் 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி உள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. ஆனால் தமிழக அரசு தவறான தகவலை தெரிவித்து வருகிறது. தற்போது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.


திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி ஆர்.கே.நகரில் தினகரன் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்று உள்ளார்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

பின்னர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து நிருபர்கள் கேட்டபோது, கேப்டன் கூறியது போல், ஓட்டுப்போட தகுதியுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். குற்ற வழக்கு இல்லாமல் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் ஜனநாயக ரீதியாக அரசியலில் பங்கேற்கலாம் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com